/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 03, 2024 12:51 PM
நாமக்கல்: மாவட்ட அ.தி.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் நாமக்கல் அலுவலகத்தில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சரோஜா, எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி, மாநில அமைப்பு செயலாளர் ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி
எம்.எல்.ஏ., தலைமை வகித்து
பேசியதாவது:
விரைவில் லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும்.
மேலும், வாக்காளர்களை சந்தித்து, அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும். தி.மு.க., அரசின் குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட, நகர, ஒன்றிய, டவுன் பஞ்., செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர்
பங்கேற்றனர்.