/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி
ADDED : ஜூன் 15, 2025 01:56 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, மற்றொரு லாரி மீது மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து, 'கூரியர் பார்சல்' ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி திருச்சியை நோக்கி, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் மோகன், 23, ஓட்டி வந்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, மோகன் துாக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இதனால், கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, எதிர் திசையில் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கன்டெய்னர் லாரி டிரைவர் மோகன், 23, மாற்று டிரைவர் ராம்பிரசாத், 35, 'லிப்ட்' கேட்டு வந்த முசிறி மணல் மேட்டை சேர்ந்த அன்பழகன் மகன் அஜித், 38, மற்றும் நாமக்கலில் இருந்து வந்த லாரி டிரைவரான, புதுச்சத்திரம் கண்ணுார் பட்டியை சேர்ந்த மணி மகன் வேலுச்சாமி, 40, அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் சரவணன் உள்ளிட்ட, ஐந்து பேரும் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் வேலுச்சாமியை, மேல் சிகிச்சைக்காக சேலம் அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிகாலை நடந்த விபத்தால், 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரிகளை அப்புறப்படுத்தினர். அதன்பின் போக்குவரத்து சீரானது.