/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'கேட்' இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் தொல்லை'கேட்' இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் தொல்லை
'கேட்' இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் தொல்லை
'கேட்' இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் தொல்லை
'கேட்' இல்லாத ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் தொல்லை
ADDED : ஜூன் 08, 2024 02:29 AM
ராசிபுரம்: பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'கேட்' இல்லாததால் நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் பிரதான சாலையில் பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியை சுற்றி பள்ளிப்பட்டி, வெட்டுக்காடு, நரசிம்மன் காடு, கல்குறிச்சி உள்ளிட்ட கிராமங்கள் அதிகம் உள்ளதால், எப்போதும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் கூட்டம் அதிகம் இருக்கும். ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். ஆனால், நுழைவுப்பகுதியில், 'கேட்' வைக்க வசதி செய்யப்பட்டிருந்தும், 'கேட்' இதுவரை பொருத்தவில்லை. இதனால், தெருநாய்கள் அவ்வப்போது சுகாதார நிலைய வளாகத்திற்குள் புகுந்து, சண்டையிடுவதால் நோயாளிகள் பீதியடைகின்றனர்.
சில சமயங்களில் கால்நடைகளும் உள்ளே புகுந்து விடுகின்றன. எனவே, பேளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 'கேட்' அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.