/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
மல்லசமுத்திரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ADDED : ஜன 04, 2024 11:39 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
டவுன் பஞ்., தலைவர் திருமலை முன்னிலை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,
ஈஸ்வரன் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார்.
தொடர்ந்து, மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, காளிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில், 18.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணி, டாக்டர் சுப்பராயன் சாலையில், 10.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலைப்பணி, தியாகி குமரன் கைத்தறி சங்கம் பின்புறம், 3.90 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலைப்பணி, பள்ளிப்பட்டி சாலையில், 3.53 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் சாலைப்பணி என மொத்தம், 36.45 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்க உள்ள பணிகளுக்கு, பூமிபூஜை செய்து தொடங்கி
வைத்தார்.