/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 25, 2024 10:10 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில், காவிரியாற்று தண்ணீரை மாசடைய செய்யும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பகுதியில் இயங்கும் பெரும்பாலான சாய ஆலைகள், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக ஆற்றில் கலப்பதால், காவிரி தண்ணீர் மாசடைகிறது. இதற்கு காரணமான சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, லோக் ஜனசக்தி கட்சியின், மாநில இளைஞரணி துணைத்தலைவர் ஆதவன் தலைமையில், நேற்று ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, லோக் ஜனசக்தி கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவர் ஆதவன் கூறியதாவது:
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாய ஆலைகள், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல், நேரடியாக ஆற்றில் கலப்பதால் ஆற்று தண்ணீர் மாசடைகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. விதிமுறை மீறும் சாய ஆலைகள் மீது, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். மனு கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை. விரைவில் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்களே களத்தில் இறங்கி, சாயக்கழிவுநீர் வெளியேறும் குழாய்களை உடைத்து எறிவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.