/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.38.22 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம் ரூ.38.22 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
ரூ.38.22 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
ரூ.38.22 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
ரூ.38.22 லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்
ADDED : மே 29, 2025 01:53 AM
திருச்செங்கோடு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் கிழமை பருத்தி, எள் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த பருத்தி ஏலத்தி, பிடி ரகம் குவிண்டால், 6,100 ரூபாய் முதல், 7,400 ரூபாய்க்கு விற்பையானது. 50 மூட்டை பருத்தி, ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், எள் ஏலத்தில், கருப்பு எள் கிலோ, 115.10 ரூபாய் முதல், 151.40 ரூபாய், வெள்ளை எள், 114 ரூபாய் முதல், 126.90 ரூபாய்; சிகப்பு எள், 107.90 ரூபாய் முதல், 131.90 ரூபாய் என, 465 மூட்டை எள், 37 லட்சத்து, 22,000 ரூபாய்க்கு விற்பனையானது. பருத்தி, எள் என மொத்தம், 38.22 லட்சத்துக்கு விற்பனையானது.