/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தலைமறைவு குற்றவாளி பள்ளிப்பாளையத்தில் கைது தலைமறைவு குற்றவாளி பள்ளிப்பாளையத்தில் கைது
தலைமறைவு குற்றவாளி பள்ளிப்பாளையத்தில் கைது
தலைமறைவு குற்றவாளி பள்ளிப்பாளையத்தில் கைது
தலைமறைவு குற்றவாளி பள்ளிப்பாளையத்தில் கைது
ADDED : மே 29, 2025 01:53 AM
பள்ளிப்பாளையம் ஜேடர்பாளையம் போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குறைவாளியை, பள்ளிப்பாளையம் போலீசார், நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறியதாவது: ஜேடர்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சோழசிராமணி பகுதியில், ஏழு பவுன் தங்க செயின் திருட்டு வழக்கில் மணிகண்டன் 27, என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தவர், நான்கு மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மணிகண்டன், பள்ளிப்பாளையத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. பள்ளிப்பாளையம் போலீசார் மணிகண்டனை கைது செய்து, ஜேடர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இவர் மீது, 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.