/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடுகூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு
ADDED : ஜன 05, 2024 11:33 AM
நாமக்கல்: கூட்டுறவு வங்கி உதவியாளர்களுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
நேர்முகத்தேர்வுக்கான கடிதத்தை, 7 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் மற்றும் எழுத்தர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம், பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த நவ.,10ம் தேதி அறிவிப்பு வெளியானது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நகர கூட்டுறவு வங்கிக்கு, 22, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், 37, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், 16, பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயம் மற்றும் கடன் சங்கம், 1, நகர கூட்டுறவு கடன் சங்கம், 1 என மொத்தம், 77 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. நாமக்கல்லில் மட்டும், 1,573 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின், 1,408 பேருக்கு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வு நாமக்கல் அடுத்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. 1,258 பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியல், நாமக்கல் கூட்டுறவு இணையதளத்தில் வெளியானது. 240 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்கள், 7 ம் தேதி முதல் நேர்முகத் தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், நேர்முகத்தேர்வு வரும், 19, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது என மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.