ADDED : செப் 17, 2025 02:07 AM
பள்ளிப்பாளையம், :பள்ளிப்பாளையம் அருகே, செங்குட்பாளையம் பகுதியில் வீடு கட்டி கொடுத்த தொழிலாளிக்கு, சம்பளம் பணம் தராத நபரை கண்டித்து, அவரது வீட்டின் முன்பு, நேற்று நாமக்கல் மாவட்ட கட்டட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட தலைவர் அசோகன் கூறியதாவது: செங்குட்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு, வீடு கட்டி கொடுத்த தொழிலாளிக்கு சம்பளம், 6.20 லட்சம் ரூபாயை கொடுக்காமல் உள்ளனர். பள்ளிப்பாளைம் போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், சம்பந்தப்பட்டவரின் வீட்டின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள், பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.