/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமாள் கோவிலில் அன்னதானம் ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமாள் கோவிலில் அன்னதானம்
ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமாள் கோவிலில் அன்னதானம்
ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமாள் கோவிலில் அன்னதானம்
ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமாள் கோவிலில் அன்னதானம்
ADDED : செப் 18, 2025 01:41 AM
சேந்தமங்கலம், சேந்தமங்கலம், நைனாமலையில் குவலயவல்லி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வரதராஜ பெருமாளை தரிசனம் செய்வர். மலைப்பகுதிக்கு செல்ல முடியாதோர், அடிவார பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டு செல்வர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான வரும், 20ல் ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதுவரை, 20க்கும் மேற்பட்ட கோவில்களில் மாதந்தோறும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
பிரதி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமைகளில் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் எனவும், அன்னதான விழாவில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும், ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இக்கோவில், புதன்சந்தையில் இருந்து, 4 கி.மி., தொலைவிலும், சேந்தமங்கலத்தில் இருந்து, 5 கி.மி., தொலைவிலும், நாமக்கல்லில் இருந்து, 10 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும், அரசு சிறப்பு பஸ் வசதி செய்துள்ளது.