ADDED : ஜூன் 30, 2024 02:10 AM
நாமகிரிப்பேட்டை, ஜநாமகிரிப்பேட்டை வட்டார காங்., சார்பில் மெட்டாலா பஸ் ஸ்டாப் பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் இந்திரா சிலை அமைக்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால், பல்வேறு காரணங்களால் சிலை வைக்கப்பட்ட நிலையில், பணி முழுமை அடையவில்லை. இதனால் சிலையை மூடி வைத்திருந்தனர். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை வட்டார காங்., மீண்டும் இப்பணியை தொடங்கி முடித்தனர். சிலை திறப்பு விழா, இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை, பாரத ஒற்றுமை நீதி பயண கொடியேற்று விழா, இந்திரா சிலை திறப்பு விழா, முன்னாள் சேர்மன் புள்ளியப்பன் நினைவு பட திறப்பு விழா என, முப்பெரும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மேற்கு ஒன்றிய வட்டார தலைவர் இளங்கோவன் தலைமை வகிக்கிறார். எம்.பி., ராஜேஸ்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.