ADDED : ஜூன் 30, 2024 02:09 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கார்கூடல்பட்டி, மெட்டாலா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கலெக்டர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கேட்டுகாரர் தோட்டம் செல்ல பொதுப்பாதை உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், இவ்வழியாக செல்லும் வாகனங்களையும் நிறுத்தி பிரச்னை செய்கின்றனர். நீதிமன்றம் பொதுப்பாதை எனக்கூறி வாகனம் போக வர உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒரு சிலர் தொடர்ந்து பொதுப்பாதையில் வாகனம் செல்வதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து தாசில்தார், போலீசாரிடம் புகார் செய்துள்ளோம். எனவே, பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.