/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: மக்கள் தவிப்பு மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: மக்கள் தவிப்பு
மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: மக்கள் தவிப்பு
மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: மக்கள் தவிப்பு
மூடி கிடக்கும் சுகாதார வளாகம்: மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:29 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியன், தொட்டியவலசு பஞ்., கிழக்கு வலசு பகுதியில் பொது சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த, ஓராண்டுக்கு முன் பொது சுகாதார வளாகம் திடீரென மூடப்பட்டது.இதுநாள் வரை சுகாதார வளாகம் திறக்கப்படாததால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொது சுகாதார வளாகத்தை திறக்க தொட்டியவலசு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.