/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மத்திய அரசு திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்மத்திய அரசு திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்
மத்திய அரசு திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்
மத்திய அரசு திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்
மத்திய அரசு திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்
ADDED : பிப் 24, 2024 03:42 AM
நாமக்கல்: பா.ஜ., விவசாய அணி சார்பில், லோக்சபா தொகுதி விவசாயிகள் மற்றும் விவசாய அணி செயல்வீரர்கள் மாநாடு, நாமக்கல்லில் நேற்று நடந்தது. விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் பங்கேற்றார்.
தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், கிஷான் சம்மன் நிதி, விவசாய பண்ணை திட்டங்கள், இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு, ஆவாஷ் யோஜனா உள்பட பல்வேறு மத்திய அரசு திட்டங்கள், 3 கோடி பேரை சென்றடைந்துள்ளது. உலகிலேயே, அதிகளவில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் நடப்பது இந்தியாவில் தான். அந்த திட்டத்தை கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். மத்திய அரசின் பல திட்டங்கள், விவசாயிகளை சென்றடையாமல், தி.மு.க., அரசு தடுத்து வருகிறது.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், வேம்பு செடி வழங்குவதற்கு, இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களே வேம்பு செடிகளை வழங்கி வருகின்றனர். நெல், கரும்புக்கு ஆதார விலையை, தமிழக அரசு கொடுக்கவில்லை. கர்நாடகாவில் விவசாயிகளை பாதுகாப்போம் என்ற போர்வையில், அங்குள்ள அரசியல் கட்சியினர் விவசாயிகளை துாண்டி விடுகின்றனர். அது, இரு மாநிலத்தினருக்கு இடையே உள்ள நட்புணர்வை கெடுக்கிறது. பா.ஜ., ஒருபோதும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்காது. வரும், 27ல், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதற்குள், கூட்டணி முடிவு உறுதியாகி விடும். நிறைய கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.