/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ போலீசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு போலீசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
போலீசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
போலீசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
போலீசுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 02:03 AM
சேந்தமங்கலம், ;நாமக்கல், கொசவம்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமாரன், 38; இவர் சட்டத்துக்கு விரோதமாக மது விற்ற வழக்கில், மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராக, நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்த வீரக்குமாரன், அங்கிருந்த மதுவிலக்கு போலீஸ் கார்த்திக் என்பவருக்கு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து புகார்படி, வீரக்குமாரன் மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.