/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சிறுவனை தாக்கிய இருவர் கைது மறியல் செய்த 25 பேர் மீது வழக்குசிறுவனை தாக்கிய இருவர் கைது மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
சிறுவனை தாக்கிய இருவர் கைது மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
சிறுவனை தாக்கிய இருவர் கைது மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
சிறுவனை தாக்கிய இருவர் கைது மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 12, 2024 11:27 AM
ப.வேலுார்: பரமத்தியில், சிறுவனை தாக்கிய இருவரை கைது செய்து, சாலை மறியலில் ஈடுபட்ட, 25 பேர் மீது போலசீார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர், 15 வயது சிறுவன். அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, தந்தையின் டூவீலருக்கு பெட்ரோல் நிரப்ப நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு பங்குக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த பரமத்தி அருகே, உழவர்பட்டியை சேர்ந்த சிலர் சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் பரமத்தி போலீசில் புகாரளித்தனர்.
இதையடுத்து சிறுவனை தாக்கியதாக, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, பரமத்தியை சேர்ந்த தியாகராஜன் மகன் விக்ரம், 22, உழவர்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சய், 23, ஆகிய இருவரை, பரமத்தி போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும், கடந்த, 9ல் சிறுவனை தாக்கிய நபர்களை கைது செய்யக்கோரி, பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்ட, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த, 25 பேர் மீது பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.