/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்
மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்
மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்
மின் கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்: 3 பேர் உயிர் தப்பினர்
ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
மோகனுார்: சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 36.
இவர், தத்தகிரி முருகன் கோவிலில் குருக்கள். நேற்று முன்தினம், நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து, தன் தாத்தா, பாட்டியை அழைத்துக் கொண்டு, 'ஷிப்ட் ஐ20' காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு, வளையப்பட்டி - திருச்சி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே கார் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில், பயணம் செய்த சண்முகசுந்தரம், அவரது தாத்தா, பாட்டி ஆகிய மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இந்த சாலை வளையப்பட்டி பகுதியில் வளைந்து செல்வதால், வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதேபோல், வளையப்பட்டியில், திருச்சி சாலை, நாமக்கல் சாலை, மோகனுார் சாலை சந்திப்பில், பாதுகாப்பு குறைவாகவும், சென்டர் மீடியன் இல்லாமல் இருப்பதாலும், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.