/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
சிறுவர்கள் ஓட்டிய 2 டூவீலர் பறிமுதல்
ADDED : ஜூலை 10, 2024 07:21 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனுார், அணியாபுரம் பகுதி களில், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் குழுவினர், நேற்று, 18 வயதுக்கு குறைவான நபர்கள் கார், டூவீலர் ஓட்டுகிறார்களா என, கண்டறிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 18 வயதுக்கு குறைவான, இரண்டு சிறுவர்கள் டூவீலர் ஓட்டி வந்தனர்.
அவர்களை நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற, ஆறு வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதேபோல், டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் உள்பட, 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வாகன சோதனையில், 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 'இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விதிமுறை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரித்தனர்.