/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சமுதாய வளப்பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு சமுதாய வளப்பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு
சமுதாய வளப்பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு
சமுதாய வளப்பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு
சமுதாய வளப்பயிற்றுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 12, 2025 02:22 AM
நாமக்கல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின், சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (சி.எம்.டி.சி.,) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும், உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு, சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும், ஒரு உயர்நிலை மக்கள் அமைப்பாகும். இந்த சேவைகளை வழங்கிட தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது, 5 முதல், 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மேலும், ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த தெரிந்தவராகவும், சமுதாய வளப்பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம்.
சமுதாய வளப் பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக, 350 ரூபாய் முதல், 750 ரூபாய் வரை வழங்கப்படும். விண்ணப்ப படிவம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது வெப்சைட்டில் இருந்து டவுன் லோடு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 17ம் தேதி மாலை 5:00 மணிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.