/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலுாரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம்: மக்கள் குற்றச்சாட்டுப.வேலுாரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம்: மக்கள் குற்றச்சாட்டு
ப.வேலுாரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம்: மக்கள் குற்றச்சாட்டு
ப.வேலுாரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம்: மக்கள் குற்றச்சாட்டு
ப.வேலுாரில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம்: மக்கள் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 25, 2024 01:27 AM
ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் சாக்கடை வடிகால் வசதி ஏற்ப-டுத்த, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வந்தன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். இந்நிலையில் சாக்கடை கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.இதற்கு முக்கிய காரணமாக, சாக்கடை கால்வாய் செல்லும் பகு-தியில், தி.மு.க., பிரமுகர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி கடைகள் அமைத்துள்ளதே ஆகும். சாக்கடை அமைத்தால் கடை-களை அப்புறப்படுத்த நேரிடும் என்பதால், பணிகள் பாதியி-லேயே நிறுத்தப்பட்டன.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை-டுத்து, நாமக்கல் மாவட்ட மண்டல உதவி செயற்பொறியாளர் பழனி, இளநிலை பொறியாளர் வீரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் ஆய்வு நடத்தி, 'ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்' என, எச்சரிக்கைவிடுத்தனர். ஆனால், தி.மு.க., பிரமுகர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடி-யாது என மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், மேற்-கொண்டு பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படாமல் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: மழைக்காலங்களில், இப்பகுதி வீடுகளுக்கு மழைநீர் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. ப.வேலுார், சுல்தான்பேட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்-கடை கால்வாய் அமைக்காவிட்டால் டவுன் பஞ்., அலுவலகம் முன் போராட்டம் செய்ய நேரிடும். ஆக்கிரமிப்புகளை அகற்று-வது போல் அதிகாரிகள் கண் துடைப்பு நாடகம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.