/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணிஉலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 13, 2024 08:20 AM
நாமக்கல்: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடந்த விழிப்புணர்வு பேரணியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் பங்கேற்றனர்.குடும்ப நலத்துறை சார்பில், ஜூலை, 11ல் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தாண்டு, 'ஒவ்வொரு தம்பதி-யரின் பெருமை நலம். அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு, மக்கள் தொகை பெருக்-கத்தின் விளைவுகள், ஆணும், பெண்ணும் சமம், பெண் சிசு கொலையை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வ-யது திருமணத்தை தடுத்தல், வளரிளம் பெண்கள் ஆரோக்கி-யத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் பற்றி காணொளி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.அதேபோல், வரும், 24 வரை, அனைத்து அரசு மருத்துவம-னைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், தகுதியுள்ள தம்பதிய-ருக்கு நிரந்தர கருத்தடை முறைகளான ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதையொட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விழிப்-புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார்.பள்ளி முன் துவங்கிய பேரணி, மோகனுார் சாலை, பஸ் ஸ்டாண்ட், மணிக்கூண்டு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. பள்ளி மாணவ, மாணவியர், செவிலியர்கள் உள்பட, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், அரசுத்துறை அலுவலர்கள் உள்-பட பலர் பங்கேற்றனர்.