ADDED : ஜூன் 02, 2025 06:47 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மைய நுாலகத்தில், 28 ஆண்டுகள் நுாலகராக பணியாற்றி, பணி நிறைவு பெற்ற நுாலகர் தங்கவேலுக்கு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் தலைமை வகித்தார். மைய நுாலக முதல் நிலை நுாலகர் சக்திவேல் வரவேற்றார். கம்பன் கழகம், பசுமை நாமக்கல் தலைவர் சத்தியமூர்த்தி, தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயுரப்பன், கலைமாமணி அரசுபரமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மைய நுாலகத்தில் மாணவ, மாணவியருக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து, 'மக்கள் நுாலகர்' என பட்டம் சூட்டப்பட்டது. முடிவில், நுாலகர் தங்கவேலு ஏற்புரையாற்றினார். முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.