/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி: ஆசிரியர்கள் கூட்டணி கண்டனம்டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி: ஆசிரியர்கள் கூட்டணி கண்டனம்
டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி: ஆசிரியர்கள் கூட்டணி கண்டனம்
டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி: ஆசிரியர்கள் கூட்டணி கண்டனம்
டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி: ஆசிரியர்கள் கூட்டணி கண்டனம்
ADDED : ஜூன் 24, 2024 07:11 AM
ராசிபுரம் : டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் கூடுதல் பணி செய்ய வேண்டி உள்ளதால், ஆசிரியர்கள் கூட்டணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விபரங்கள், நலத்திட்ட உதவிகள், மாணவர்கள் வருகை, ஆசிரியர்களுக்கான குறைகளை பதிவிடுதல், பாடம் குறித்த விளக்கம், உடல் ஆரோக்கியம், இடை நிற்கும் மாணவர்கள் ஆகிய விபரங்களை பதிவிட, டி.என்.எஸ்.இ.டி., (தமிழ்நாடு ஸ்கூல் எஜூகேஷன் டிபார்ட்மென்ட்) அப்ளிகேஷன் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், திட்டங்கள் என்ற நுழைவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களான பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், கலர் பென்சில், காலணி, பை, சீருடை, காலை, மதிய உணவு குறித்த விபரங்களை பதிவிட வேண்டும். இந்தாண்டு கடந்த, 10ல் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தொடங்கிய நாள் அன்றே பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. இதுகுறித்து டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் பதிவேற்றமும் செய்தனர்.தற்போது, இந்த ஆப்பில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். திட்டம் நுழைவில் சென்றவுடன் எந்த வகுப்பு என்பதையும், எந்த திட்டம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பாடப்புத்தகத்தை தேர்வு செய்தால் எத்தனையாவது பருவம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதல் பருவத்தை தேர்வு செய்தால், அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் புத்தகம் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதை உறுதி செய்தபின், ஒவ்வொரு மாணவரும் புத்தகம் பெற்றுக்கொள்ளும் போட்டோவை தனித்தனியாக அப்லோடு செய்ய வேண்டும். வகுப்பில், 30 மாணவர்கள் இருந்தால், 30 மாணவர்களுக்கும் புத்தகம் தருவது போல் போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், நோட்டுப்புத்தகம், காலனி, சீருடை, கலர் பென்சில் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக போட்டே எடுப்பது கட்டாயம்.அதேபோல், காலை உணவு, மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். புதிதாக சாப்பிடுகிறார்களா, ஏற்கனவே சாப்பிடுபவரா, காலை, மதியம் இரண்டு வேளையும் சாப்பிடுபவரா, ஒரு வேளை மட்டும் சாப்பிடுபவரா என்பதை உறுதி செய்து அதற்கான பெற்றொர் ஒப்புதல் கடிதத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்த பணிகளால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் இதற்கான மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. சாப்ட்வேர் அப்டேட் செய்யும்போது இந்த மாற்றங்கள் வந்துவிடுகிறது. விரைவில் இப்பணிகளை எப்போது முடிக்க வேண்டும் என்ற உத்தரவு வரவுள்ளது.இந்நிலையில், நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டி.எஸ்.எஸ்.இ.டி., ஆப்பில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களால் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர் சங்கங்களிடம் பேசுகையில், 'வருகைப்பதிவேடு தவிர, 'எமிஸ்' உள்ளிட்ட எவ்வித பணிகளையும் அடுத்தாண்டு ஆசிரியர்கள் செய்ய வேண்டியதில்லை' என உறுதி அளித்தார். 'எமிஸ்' உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்தார். ஆனால், இந்த கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி ஏற்படும் வகையில், 'ஆப்'பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்படும். இதை அமல் படுத்தினால், ஆசிரியர்கள் அனைவரும் அதிருப்தியடைவதுடன், பணி பளு அதிகமாகி மன உளைச்சலுக்கு ஆளாவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.