Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'வந்தே பாரத்' ரயில் நாளை முதல் நாமக்கல்லில் நின்று செல்லும்

'வந்தே பாரத்' ரயில் நாளை முதல் நாமக்கல்லில் நின்று செல்லும்

'வந்தே பாரத்' ரயில் நாளை முதல் நாமக்கல்லில் நின்று செல்லும்

'வந்தே பாரத்' ரயில் நாளை முதல் நாமக்கல்லில் நின்று செல்லும்

ADDED : ஜூன் 25, 2024 02:03 AM


Google News
நாமக்கல்: மதுரையில் இருந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக வண்டி எண், 06003/06004, 'வந்தே பாரத்' சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, 26 முதல் இயக்கப்படுகிறது. அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க நாமக்கல்லில் இந்த ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் வந்து செல்லும் நேரம் விபரம்: வண்டி எண். 06003 அதிகாலை, 5:15 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும். 5:58க்கு திண்டுக்கல் வந்தடையும், அங்கிருந்த, 6:00 மணிக்கு கிளம்பி, 6:50 மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியில் இருந்து, 6:55 மணிக்கு கிளம்பி, 8:08 மணிக்கு கரூர் சென்றடையும். 8:10 மணிக்கு கரூரில் இருந்து கிளம்பி, 8:32 மணிக்கு நாமக்கல் வந்தடையும். நாமக்கல்லி இருந்து, 8:34 மணிக்கு கிளம்பி, 9:27 மணிக்கு சேலம் சென்றடையும். சேலத்தில் இருந்து, 9:32 மணிக்கு கிளம்பி, 11:00 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். அங்கிருந்து, 12:50 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் சென்றடையும். அங்கிருந்து, 12:52 மணிக்கு கிளம்பி பகல், 1:00 மணிக்கு பெங்களூரு எஸ்எம்விபி ரயில் நிலையம் சென்றடையும்.

வண்டி எண், 06004 வந்தே பாரத் சிறப்பு ரயில் மறு மார்க்கத்தில், பெங்களூரில் இருந்து மதியம், 1:45 மணிக்கு கிளம்பி, 1:55 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் வந்தடையும். அங்கிருந்து, 1:57 மணிக்கு கிளம்பி மாலை, 3:35 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும். அங்கிருந்து கிளம்பி மாலை, 4:27 மணிக்கு சேலம் வந்தடையும். அங்கிருந்து, 4:32 மணிக்கு கிளம்பி, 5:33 மணிக்கு நாமக்கல் வந்தடையும், நாமக்கல்லில் இருந்து, 5:35 மணிக்கு கிளம்பி, 5:53க்கு கரூர் சென்றடையும். அங்கிருந்து, 5:55க்கு கிளம்பி, 7:20 மணிக்கு திருச்சி சென்றடையும், அங்கிருந்து, 7:25 மணிக்கு கிளம்பி இரவு, 9:08 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அங்கிருந்து, 9:10 மணிக்கு கிளம்பி, 9:45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும். செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயங்கும். சோதனை ஓட்டமாக ஜூலை 29ம் தேதி வரை இயக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us