/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மண் வெட்டியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்புமண் வெட்டியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
மண் வெட்டியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
மண் வெட்டியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
மண் வெட்டியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
சேந்தமங்கலம்: மண் வெட்டியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார்.சேந்தமங்கலம் அருகே, கொண்டமநாய்க்கன்பட்டி நடுத்தெ-ருவை சேர்ந்தவர் விஜய், 23.
இவர், நேற்று முன்தினம், அருகே உள்ள அக்கா வீட்டிற்கு சென்று மது போதையில் தகராறில் ஈடு-பட்டுள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த அக்கா வீட்டுக்காரரான மாணிக்கம், விஜயை மண் வெட்டியால் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜய், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று விஜய் உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார், மாணிக்கத்தை கைது செய்தனர்.