Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 70 குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்புசட்ட நடவடிக்கையை தவிர்க்க கமிஷனர் எச்சரிக்கை

70 குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்புசட்ட நடவடிக்கையை தவிர்க்க கமிஷனர் எச்சரிக்கை

70 குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்புசட்ட நடவடிக்கையை தவிர்க்க கமிஷனர் எச்சரிக்கை

70 குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்புசட்ட நடவடிக்கையை தவிர்க்க கமிஷனர் எச்சரிக்கை

ADDED : மார் 16, 2025 01:41 AM


Google News
நாமக்கல்:'வரி, கட்டணங்கள் செலுத்தாத, 49 குடிநீர் இணைப்புகள், 21 பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்க்க வரி இணங்களை செலுத்த வேண்டும்' என, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சொத்துவரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில், இதுவரை, 75 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டப்படி, 2024-25ம் நிதியாண்டு வரை, வரி மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டிய கால அவகாசம், 2024 அக்., 31 வரை முடிந்துவிட்டது.

வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாத நபர்களின் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப் படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர்களின் அசையும், அசையா சொத்துகளை மாநகராட்சி நிர்வாகம் வசம் கையகப்படுத்த ஜப்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை, மாநகர பகுதிகளில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாத, 49 குடிநீர் இணைப்புகள், 21 பாதாள சாக்கடை இணைப்புகள், மாநகராட்சி பணியாளர்கள் மூலம் துண்டிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் உடனடியாக, மாநகராட்சிக்கு, 2024-25ம் நிதியாண்டு வரை செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை மாநகராட்சியில் செலுத்தி, சட்டரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையங்கள் இயங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us