Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் நாய்கள் கடித்து 5 ஆடு பலி

ADDED : பிப் 24, 2024 03:19 AM


Google News
எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., ஆத்துவாரியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை, நாய்கள் கடித்ததில், 5 ஆடுகள் உயிரிழந்தன.

எருமப்பட்டி டவுன் பஞ்., ஆத்துவாரியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி, 45; கூலித்தொழிலாளி. இவர், வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை, நேற்று மதியம், மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் அங்கு வந்த, 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள், 9 வெள்ளாடுகளை கடித்து குதறின. இதில், 5 ஆடுகள் உயிரிழந்தன. தகவலறிந்து அங்கு சென்ற கால்நடைத்துறை உதவி மருத்துவர் சேகர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். உயிரிழந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து குழிதோண்டி புதைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us