/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு நாமக்கல்லில் 4,620 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 16, 2025 03:21 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், 24 மையங்களில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, 1ஏ போட்டி தேர்வில், 4,620 பேர் பங்கேற்றனர். 1,459 தேர்வர்கள் பங்கேற்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1, 1ஏ பதவிகளுக்கான எழுத்து தேர்வு, நேற்று, நாமக்கல் மாவட்டத்தில், 24 மையங்களில் நடந்தது. 6,079 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். நாமக்கல் கலெக்டர் உமா, நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, செல்வம் கலை அறிவியல் கல்லுாரி, ராசிபுரம் ஞானமணி தொழில் நுட்ப கல்லுாரிகளில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தேர்வு மையங்களில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதையும் பார்வையிட்டார்.அப்போது, அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''தேர்வு கூடங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்வு பணிகளில், 24 முதன்மை கண்காணிப்பாளர், ஆறு நடமாடும் குழுக்கள், 24 ஆய்வு அலுவலர்கள் உட்பட கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படை மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் ஈடுபட்டிருந்னர். நாமக்கல் மாவட்டத்தில் நடந்த தேர்வில், 4,620 தேர்வர்கள் எழுதினர். 1,459 பேர் பங்கேற்கவில்லை,'' என்றார்