/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மதுரையில் டூவீலர் திருடிய வழக்கு குமாரபாளையத்தில் 4 பேர் கைது மதுரையில் டூவீலர் திருடிய வழக்கு குமாரபாளையத்தில் 4 பேர் கைது
மதுரையில் டூவீலர் திருடிய வழக்கு குமாரபாளையத்தில் 4 பேர் கைது
மதுரையில் டூவீலர் திருடிய வழக்கு குமாரபாளையத்தில் 4 பேர் கைது
மதுரையில் டூவீலர் திருடிய வழக்கு குமாரபாளையத்தில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 18, 2025 01:29 AM
குமாரபாளையம், மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட புதுார், தல்லாகுளம் பகுதிகளில் அடிக்கடி டூவீலர் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த தியானேஸ்வரன், 36, என்பவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். மதுரை, தல்லாகுளம் கூர்நோக்கு பள்ளியில் தங்கி, புதுார் ஐ.டி.ஐ.,யில் படித்தவர். அப்போது புதுார் போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில், 10 டூவீலர், தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், நான்கு டூவீலர்களை திருடியதும் தெரியவந்தது.
திருடிய டூவீலர்களை, குமாரபாளையத்தை சேர்ந்த பாலாஜி, 32, விவேக் பாலாஜி-, 40, கவுதம், 29, ஆகியோரிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது. குமாரபாளையத்துக்கு நேற்று வந்த மதுரை மாநகர் தனிப்படை போலீசார், பாலாஜி, கவுதம், விவேக் பாலாஜி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.