/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/3வது முறை மோடி பதவியேற்பு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்3வது முறை மோடி பதவியேற்பு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
3வது முறை மோடி பதவியேற்பு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
3வது முறை மோடி பதவியேற்பு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
3வது முறை மோடி பதவியேற்பு பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 10, 2024 01:46 AM
நாமக்கல்: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நேற்று பதவியேற்றது. இதையடுத்து, நாடு முழுதும், பா.ஜ.,வினர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்திய பிரதமராக தொடர்ந்து, மூன்றாவது முறையாக மோடி, நேற்று பதவியேற்றார். இதை கொண்டாடும் வகையில், நாமக்கல் மாவட்டம் முழுதும், பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகர தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
* மோகனுார் டவுன் பஞ்., ரவுண்டானா அருகே ஒன்றிய தலைவர் செல்வமணி தலைமையில், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.