Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 10,137 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 10,137 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 10,137 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு மாவட்டத்தில் 10,137 பேர் 'ஆப்சென்ட்'

ADDED : ஜூன் 10, 2024 01:46 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 10,137 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். 41,278 தேர்வர்கள் தேர்வெழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-4 பணிக்காக, நாமக்கல் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள, 39 தேர்வு மையங்களில், 12,065 தேர்வர்கள், மோகனுாரில், 8 மையங்களில், 2,229, சேந்தமங்கலத்தில், 17 மையங்களில், 4,560, ராசிபுரத்தில், 44 மையங்களில், 13,350. ப.வேலுாரில், 21 மையங்களில், 5,872, திருச்செங்கோட்டில், 35 மையங்களில், 10,403, குமாரபாளையத்தில், 10 மையங்களில், 2,936 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

மாவட்டத்தில், மொத்தம், 174 தேர்வு மையங்களில், 51,415 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத, 'ஹால் டிக்கெட்' பெற்றிருந்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கே தேர்வர்கள் மையங்களுக்கு வந்தனர். 9:00 மணியுடன் தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்டன. 9:30 முதல், 12:45 மணி வரை தேர்வு நடந்தது.

நாமக்கல் கலெக்டர் உமா, நாமக்கல், மோகனுார், ப.வேலுார், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில், 2,420 பேர், குமாரபாளையத்தில், 606, மோகனுாரில், 431, ப.வேலுாரில், 1,008.

ராசிபுரத்தில், 2,630, சேந்தமங்கலத்தில், 856, திருச்செங்கோட்டில், 2,186 என, மாவட்டம் முழுதும், 10,137 தேர்வர்கள் பங்கேற்கவில்லை. 41,278 பேர் தேர்வு எழுதினர். இது, 80.28 சதவீதம். மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்

பட்டிருந்தனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தேர்வர்கள் மையத்துக்கு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்

பட்டிருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us