/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
ADDED : ஜூலை 07, 2024 07:11 AM
நாமக்கல், : நாமக்கல் - சேலம் ரயில் போக்குவரத்து துவங்கியது முதல், சரக்கு ரயிலில் கோழி தீவனமான சோயா, மக்காச்சோளம், புண்-ணாக்கு, தவுடு, ரேஷன் தாரர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில் மூலம், நாமக்கல் மாவட்டத்துக்கு தருவிக்கப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கிலும் சேமித்து வைக்கப்ப-டுகிறது.
இந்த கோழித்தீவனம், அத்தியாவசிய பொருட்கள் கர்நா-டகா, ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.அதன்படி, நேற்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து, 1,200 டன் கம்பு, 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்-கப்பட்டது. அவற்றை, 45 லாரிகள் ஏற்றி சென்று, கோழிப்பண்-ணைகளில் இருப்பை வைக்கப்பட்டது. அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் இருந்து, 1,000 டன் நெல், 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அவற்றை, கபிலர்மலையில் உள்ள அரவை ஆலைக்கு, 45 லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.