/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கனரக வாகனங்கள் விதி மீறுவதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல் கனரக வாகனங்கள் விதி மீறுவதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல்
கனரக வாகனங்கள் விதி மீறுவதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல்
கனரக வாகனங்கள் விதி மீறுவதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல்
கனரக வாகனங்கள் விதி மீறுவதால் நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 14, 2024 01:10 AM
நாமக்கல், நாமக்கல் நகருக்குள் விதிகளை மீறி வந்து செல்லும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நாமக்கல் நகரில் இருந்து சேந்தமங்கலம், துறையூர், திருச்சி, மோகனுார், பரமத்தி, திருச்செங்கோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் கோவில்கள், பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படுவதால், காலை, மாலை நேரங்களில், வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதையடுத்து, காலை, 8:00 முதல், 11:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு, 9:00 மணி வரையும், நாமக்கல் நகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதில், மோகனுார் சர்க்கரை ஆலைக்கு செல்லும் கரும்பு லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த உத்தரவுகளை மதிக்காத கனரக வாகனங்கள், நாமக்கல் நகருக்குள் இயக்கி வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விதிகளை மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.