/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி
மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி
மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி
மது குடித்துவிட்டு வந்த கணவன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி
ADDED : ஜூலை 23, 2024 01:11 AM
ராசிபுரம் : ராசிபுரம் அருகே, கணவன் மது குடித்துவிட்டு வந்ததால் ஏற்-பட்ட தகராறில், மனைவி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்-பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லுாரை சேர்ந்த மாரிமுத்து மகன் ஜெகதீசன், 34; தறித்தொழிலாளி. இவ-ரது மனைவி பூங்கொடி, 26. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீசனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்துள்ளார்.
இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்-பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பிள்ளாநல்லுாரில் கோவில் திருவிழா நடந்து வருவதால், நேற்றும் ஜெகதீசன் மது குடித்து-விட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த பூங்கொடி, வீட்டில் கேனில் வைத்தி-ருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக்-கொண்டார். தீ உடல் முழுதும் பரவியதால், வலி தாங்க முடி-யாமல் பூங்கொடி அலறி துடித்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பூங்கொடியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.