Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிமம் வழங்க ராஜேஸ்குமார் எம்.பி.,கோரிக்கை

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிமம் வழங்க ராஜேஸ்குமார் எம்.பி.,கோரிக்கை

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிமம் வழங்க ராஜேஸ்குமார் எம்.பி.,கோரிக்கை

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு உரிமம் வழங்க ராஜேஸ்குமார் எம்.பி.,கோரிக்கை

ADDED : ஜூலை 24, 2024 07:28 AM


Google News
நாமக்கல் : நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், ராஜ்ய-சபா எம்.பி.,யுமான ராஜேஷ்குமார், பார்லிமென்ட் கூட்டத்தொ-டரில் ராஜ்யசபாவில் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, விரைவாக நிதித்துறை உரிமம் வழங்கிட வேண்டும். 1996-ல், சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பால் மற்றும் கோழி வளர்ப்பில் முக்கிய இடம் வகிப்பதுடன், பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளது. மாவட்டத்தின் பெரும்பான்மை-யான மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விவ-சாய கடன், பால் பண்ணை, கைத்தறி நெசவாளர் சங்கங்கள் உள்-ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் இப்பகுதியில் இயங்குகின்-றன.

இச்சூழலில், மாவட்டத்தின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் கணிசமான டிபாசிட் தொகை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சங்கங்கள் மற்றும் பொதுமக்கள், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்-ளனர். நாமக்கல்லில், புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, தமிழ்நாடு அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை நிறுவ பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, வங்கி முறையாக நிறுவப்பட்டு, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, கடந்த மார்ச், 13 முதல் செயல்பட தொடங்கியது.

இதை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான வங்கி உரிம விண்-ணப்பம், நபார்டு வங்கி மூலம், ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்-பட்டுள்ளது. எனவே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, உரிமம் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கிக-ளுக்கு நிதியமைச்சகம் பரிந்துரை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us