Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கே.ஜி.பி.வி., பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 18, 2024 01:14 AM


Google News
நாமக்கல்,: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

.நாமக்கல் மாவட்டம் ஒருங்கி-ணைந்த பள்ளிக்கல்வி சார்பில், 10--14 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில், கொல்லிமலை ஒன்றியத்தில், மூன்று கே.ஜி.பி.வி., என்ற கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்-பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில் அரியூர் கிழக்கு வலவு கே.ஜி.பி.வி., உண்டு உறைவிடப்-பள்ளி மையத்தை நிர்வகிக்க அனுபவம் மற்றும் பெண் கல்-வியில் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுடையவர்கள், நாமக்கல் மாவட்டம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலக மாவட்ட திட்ட அலுவலகம், நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளி வளாகம், மோகனுார் சாலை என்ற விலா-சத்தில் விண்ணப்பங்களை பெற்று, நிபந்தனைகளுக்குட்பட்டு கருத்துருக்களை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்திய சங்கங்களின் சட்டம், 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க

வேண்டும்.

பெண் கல்வி சேவையில், குறைந்தபட்சம் மூன்றாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ஆதாரம் இணைக்-கப்பட வேண்டும். தங்கள் தொண்டு நிறுவனம் எவ்வித புகா-ருக்கும் உட்பட்டு இருக்கக்கூடாது. மேலும் அந்நிறுவனம் அரசால் ஏற்கனவே முடக்கப்பட்டிருக்கக் கூடாது. மூன்றாண்-டுகள் வரவு, செலவு தணிக்கை செய்த விவரம் கருத்துருக்களுடன் இணைக்க

வேண்டும்.

விண்ணப்பங்களை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட திட்ட அலுவலகம், நாமக்கல் தெற்கு மேல்நிலைப்-பள்ளி வளாகம், மோகனுார் சாலை, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூலை, 25க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04286-227194, 98659 42054 என்ற எண்-களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us