/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
சம்பிரதாயத்திற்கு கருத்து கேட்பது ஏற்புடையதல்ல: வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
மத்திய அரசு போல்...
இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், வரும், 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது, விவசாயிகள் கூறும் கருத்துக்களை, பட்ஜெட்டில் சேர்க்க முடியாது. காரணம், அதற்கான கால நேரம் இல்லை. மத்திய அரசு போல், ஆறு மாதத்திற்கு முன்பே கருத்து கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். 'என் புருசன் கச்சேரிக்கு போரான்' என்பது போல், ஏற்கனவே பட்ஜெட் புத்தகம் தயாரித்து வைத்துவிட்டு, சம்பிரதாயத்திற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. இருந்தும், எங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளோம்.
ஒரே தவணையில்
அதேபோல், கரும்பு கொள்முதல் செய்யும்போது, சர்க்கரை ஆலைகள் வழங்கும் விலையோடு, தமிழக அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையும் ஒரே தவணையில் வரவு வைக்க வேண்டும். கரும்பு உற்பத்தி அதிகரித்தால், தமிழக அரசுக்கு நேர்முகமாக, சர்க்கரை ஆலைகள் மூலமாக, சர்க்கரை - எரிசாராயம் - எத்தனால் - கரும்பு சக்கை இவற்றின் மூலம் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.