/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேர்முக பயிற்சி, சான்றிதழ் வழங்கும் விழா நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேர்முக பயிற்சி, சான்றிதழ் வழங்கும் விழா
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேர்முக பயிற்சி, சான்றிதழ் வழங்கும் விழா
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேர்முக பயிற்சி, சான்றிதழ் வழங்கும் விழா
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேர்முக பயிற்சி, சான்றிதழ் வழங்கும் விழா
ADDED : ஜூன் 17, 2024 01:02 AM
நாமக்கல்: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், தர்மபுரி அகில இந்திய வானொலி நிலையம் சார்பில், 'அங்கக வேளாண்மையின் இன்றைய தேவைகள்' என்ற தலைப்பில், 2023 ஜன., 10 முதல் மார்ச், 28 வரையும்; 'அங்கக வேளாண்மையில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கேற்ற மண்வள மேம்பாடு' என்ற தலைப்பில, கடந்த பிப்., 8 முதல், மே, 2 வரையும், 13 பாடத்திட்டங்கள் பதியப்பட்டு, அகில இந்திய வானொலி நிலையம் தர்மபுரி மூலம், ஒவ்வொரு வாரமும் ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில், நேர்முக பயிற்சியும், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் சத்யா வரவேற்றார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ், வானொலி வேளாண் பள்ளி கையேடு வெளியிட்டு, மாறிவரும் பருவநிலை மாற்றங்களுக்கேற்ற காரணிகள், வேளாண் பள்ளியின் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ, மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்டமான பருத்தி மகசூலை அதிகரிக்க தேவையான தொழில் நுட்பம் குறித்த செயல்திட்டத்தில் தேவையான பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும் போது அணிந்து கொள்ளும் பயிர் பாதுகாப்பு உபகரணங்களை, 14 விவசாயிகளுக்கு வழங்கி மண்வள மேம்பாடு குறித்து பேசினார். ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண் கல்லுாரி முதல்வர் செல்வன், 12 பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி, பூச்சிகொல்லிகள் மற்றும் சத்து கரைசல் தெளிப்பதின் அவசியம் குறித்து பேசினார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பால்பாண்டி, பேராசிரியர்கள் தேன்மொழி, அழகுதுரை, உதவிப் பேராசிரியர்கள் சங்கர் உள்பட பலர்
பங்கேற்றனர்.