Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'வந்தே பாரத்' ரயில் நாமக்கல்லில் நிறுத்தி செல்ல பா.ஜ., கோரிக்கை

'வந்தே பாரத்' ரயில் நாமக்கல்லில் நிறுத்தி செல்ல பா.ஜ., கோரிக்கை

'வந்தே பாரத்' ரயில் நாமக்கல்லில் நிறுத்தி செல்ல பா.ஜ., கோரிக்கை

'வந்தே பாரத்' ரயில் நாமக்கல்லில் நிறுத்தி செல்ல பா.ஜ., கோரிக்கை

ADDED : ஜூன் 17, 2024 01:03 AM


Google News
நாமக்கல்; மதுரை -- பெங்களூரு செல்லும், 'வந்தே பாரத்' ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.,வினர், மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய தகவல் ஒளிபரப்புத்தறை இணை அமைச்சர் முருகன், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய ரயில்வேத்துறை சார்பில், மதுரையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக பெங்களூரு செல்லும் புதிய, 'வந்தே பாரத்' ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும், 20ல் சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார். இந்த ரயில், மதுரையில் இருந்து கிளம்பி, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூரு செல்கிறது. மறு மார்க்கமாக இதே வழியில் திரும்பி வருகிறது. மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய, 3 இடங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ராசிபுரம் ஆகிய இடங்களில் இந்த ரயிலுக்கு நிறுத்தம் இல்லை என்று தெரிகிறது.

கடந்த, 3 மாதங்களுக்கு முன், மத்திய இணை அமைச்சர் முருகன், 'மதுரை -- பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். எனவே, இந்த ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்பதை ரயில்வேத்துறை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us