/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொல்லிமலையில் பலாப்பழம் சீசன்தொடங்கியதால் வரத்து அதிகரிப்பு கொல்லிமலையில் பலாப்பழம் சீசன்தொடங்கியதால் வரத்து அதிகரிப்பு
கொல்லிமலையில் பலாப்பழம் சீசன்தொடங்கியதால் வரத்து அதிகரிப்பு
கொல்லிமலையில் பலாப்பழம் சீசன்தொடங்கியதால் வரத்து அதிகரிப்பு
கொல்லிமலையில் பலாப்பழம் சீசன்தொடங்கியதால் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 21, 2024 02:42 AM
நாமகிரிப்பேட்டை:கொல்லிமலையில் பலாப்பழம் சீசன் தொடங்கியதால், மெட்டாலா, முள்ளுக்குறிச்சி பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் மிளகு, பலாப்பழம், வழைப்பழம், காபி, அன்னாசி ஆகியவை அதிகளவு விளைகிறது. பலாப்பழம் சீசன் ஆடி மாதம் தொடங்கும். அதன்படி தற்போது சீசன் துவங்கி உள்ளதால், அடிவார பகுதியான முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, காரவள்ளி உள்ளிட்ட இடங்களில் பலாப்பழம் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. கொல்லிமலை பலாப்பழம் சுவை மிகுந்து இருப்பதால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி இவ்வழியாக செல்லும் பயணிகளும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
பழங்கள், 100 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வியாபாரிகள் ஆட்டோவில் கொண்டு வந்து மேற்குறிப்பிட்ட இடங்களில் குவித்து வருகின்றனர்.
மெட்டாலா பகுதியில், 500க்கும் மேற்பட்ட பலாப்பழங்கள் வந்து இறங்கியுள்ளன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்தாண்டு வழக்கத்தை விட சீசன் முன்கூட்டியே தொடங்கி உள்ளதாகவும், பழமும் அதிகளவு விளைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.