/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல் ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்
ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்
ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்
ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்
ADDED : ஜூலை 21, 2024 02:41 AM
ப.வேலுார்;ப.வேலுார் அரசு மருத்துவமனை எதிரே சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ப.வேலுாரில், அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ள பள்ளி சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டவுன் பஞ்சாயத்து அலுவலகம், எல்.ஐ.சி., அலுவலகம், தனியார் மருத்துவமனைகள், நுாலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இதனால், பகல் நேரம் முழுதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காமராஜர் சிலை சாலை துவக்கத்தில் இருந்து மருத்துவமனை எல்லை வரை, 500 மீட்டர் தொலைவிற்கு ஏராளமான கடைகள் துவங்கப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி, எதிர்புறம் சாலையிலேயே நீண்ட வரிசையாக ஆம்புலன்ஸ், சரக்கு ஆட்டோக்கள் மற்றும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை மீண்டும் குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். குறிப்பாக, பள்ளி சாலையில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடிவதில்லை. இதனை டவுன் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
தினமும், டி.எஸ்.பி., டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் டிராபிக் போலீசார், இந்த சாலை வழியாகத்தான் செல்கின்றனர். ஆனால், எதையும் கண்டும் காணாமல் செல்வதால், மக்கள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.