/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம் பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 16, 2024 12:53 PM
நாமக்கல்,: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் தர்மராசு தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் பாலகிருஷ்ணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பயன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் நிலவும் முறைகேடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.