/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ செத்து மிதக்கும் மீன்களால் கோவில் குளத்தில் துர்நாற்றம் செத்து மிதக்கும் மீன்களால் கோவில் குளத்தில் துர்நாற்றம்
செத்து மிதக்கும் மீன்களால் கோவில் குளத்தில் துர்நாற்றம்
செத்து மிதக்கும் மீன்களால் கோவில் குளத்தில் துர்நாற்றம்
செத்து மிதக்கும் மீன்களால் கோவில் குளத்தில் துர்நாற்றம்
ADDED : ஜூன் 16, 2024 12:53 PM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலின், உபகோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாக வரலாறு உண்டு. தற்போது, கோவிலில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பாரம்பரியம் மிக்க கோவில் குளத்தில், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் நீரை சேமித்து தண்ணீர் சுத்தமாக இருக்க மீன்களை விட்டு வளர்த்து வந்தனர்.
தற்போது, மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தது. இதையறிந்த மக்கள், தண்ணீர் அசுத்தமாக இருப்பதாக கருதி, நேற்று புதிய தண்ணீரை அந்த குளத்தில் விட்டுள்ளனர். ஆனாலும், மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள தண்ணீரை மாற்றி, புதிய தண்ணீர் விட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.