Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முட்டை விலை 25 காசு சரிவு

முட்டை விலை 25 காசு சரிவு

முட்டை விலை 25 காசு சரிவு

முட்டை விலை 25 காசு சரிவு

ADDED : ஜூன் 05, 2024 04:33 AM


Google News
நாமக்கல் : முட்டை கொள்முதல் விலை, 25 காசு குறைக்கப்பட்டு, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை குறைப்பு, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 1ல், 530 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, 5 காசு உயர்த்தி, 535 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த, 'நெக்' கூட்டத்தில், முட்டை விலை ஒரே நாளில், 25 காசு குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை குறைப்பு, பண்ணையாளர்களை கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மண்டலங்களிலும், முட்டை கொள்முதல் விலை குறைந்துள்ளது. ஆனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 'நெக்' விலையில் இருந்து, 60 காசு குறைத்து பண்ணைகளில் வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் காரணமாக, ஒரே நாளில், 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us