/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கொ.ம.தே.க., வேட்பாளர் வெற்றி தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கல் கொ.ம.தே.க., வேட்பாளர் வெற்றி தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கல்
கொ.ம.தே.க., வேட்பாளர் வெற்றி தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கல்
கொ.ம.தே.க., வேட்பாளர் வெற்றி தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கல்
கொ.ம.தே.க., வேட்பாளர் வெற்றி தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கல்
ADDED : ஜூன் 05, 2024 04:31 AM
நாமக்கல் : நாமக்கல் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா வெற்றி சான்றிதழ் வழங்கினார்.
நாமக்கல் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன், அ.தி.மு.க., கூட்டணியில், அக்கட்சியின் வேட்பாளர் தமிழ்மணி, பா.ஜ., கூட்டணியில், அதன் வேட்பாளர் ராமலிங்கம், நா.த.க., கட்சியில், கனிமொழி உள்பட, 40 பேர் போட்டியிட்டனர்.
தொடர்ந்து, நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. முதல் சுற்றில், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, 1,089 ஓட்டுகளுடன் முன்னிலை பெற்றார். அதையடுத்து, இறுதி வரை, 22 சுற்றுகளில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னிலை பெற்றார். இறுதியில், 4,62,036 ஓட்டுகள் பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, 4,32,924 ஓட்டுகள் பெற்றார். அவரைவிட, 29,112 ஓட்டுகள் அதிகம் பெற்ற மாதேஸ்வரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா சான்றிதழ் வழங்கினார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.