/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தி.மு.க., கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தால் கால்வாய் பணி பாதிப்பு தி.மு.க., கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தால் கால்வாய் பணி பாதிப்பு
தி.மு.க., கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தால் கால்வாய் பணி பாதிப்பு
தி.மு.க., கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தால் கால்வாய் பணி பாதிப்பு
தி.மு.க., கவுன்சிலரின் ஆக்கிரமிப்பு கட்டடத்தால் கால்வாய் பணி பாதிப்பு
ADDED : ஜூலை 06, 2024 11:33 PM

ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,சில் 18 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், ப.வேலுார், சுல்தான்பேட்டையில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் நடந்தன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத் தலைவராக ராஜாவும் உள்ளனர்.
கால்வாய் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது. அப்பகுதி தி.மு.க., மாவட்ட மகளிரணி துணைத் தலைவரும், ப.வேலுார் டவுன் பஞ்., 9வது வார்டு கவுன்சிலருமான ஜெயதேவி, கால்வாய் செல்லும் பகுதியை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி கடைகள் அமைத்து உள்ளதே இதற்கு காரணம்.
கால்வாய் அமைத்தால், கடைகளை அப்புறப்படுத்த நேரிடும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
தற்போது, கால்வாய் அமைக்க தோண்டிய குழியை மூடிவிட்டனர். இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி கொசுத்தொல்லை அதிகரிப்பால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஜெயதேவி கூறியதாவது:
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதை செய்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற டவுன் பஞ்., நிர்வாகம் இதுவரை எனக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை.
தாராளமாக சர்வேயர் வாயிலாக அளந்து கால்வாயை போட்டுக் கொள்ளட்டும். கால்வாய் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதி, தற்போது எங்கே போனது என தெரியவில்லை. நிதி பற்றிய விபரத்தை அதிகாரிகள் தான் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி கூறுகையில், ''சுல்தான்பேட்டை பகுதியில், மூன்று சர்வேயர்களை வைத்து அளவீடு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற கவுன்சிலர் மறுப்பதால் கால்வாய் பணி பாதியில் நிற்கிறது.
அந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதற்குரிய ஆவணம் டவுன் பஞ்., அலுவலகத்தில் தெளிவாக உள்ளது.
மக்கள் நலன் கருதி, பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்., செயல் அலுவலர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.