/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல் விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்
விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்
விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்
விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 07, 2024 01:01 AM
நாமக்கல் : வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய வாகன சோத-னையில், விதிமுறை மீறி இயக்கப்பட்ட, 35 வாகனங்கள் பறி-முதல் செய்யப்பட்டன. 4.87 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்-கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்-திவேல், உமா மகேஸ்வரி, நித்யா, சரவணன் ஆகியோர், கடந்த, ஜூனில் தொடர்ச்சியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த வாகன சோதனையின்போது, மொத் தம், 2,337 வாக-னங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில், 382 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு, 4.87 லட்சம் ரூபாய் வரியும், 3.08 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமும் வசூலிக்கப்-பட்டது. இந்த தணிக்கையின்போது, போதிய ஆவணங்கள் இன்-றியும், தகுதி சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது என, மொத்தம், 35 வாக-னங்கள் பறிமுதல் செய்ப்பட்டன.