/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மது அருந்த அனுமதித்த தாபா உரிமையாளர் கைது மது அருந்த அனுமதித்த தாபா உரிமையாளர் கைது
மது அருந்த அனுமதித்த தாபா உரிமையாளர் கைது
மது அருந்த அனுமதித்த தாபா உரிமையாளர் கைது
மது அருந்த அனுமதித்த தாபா உரிமையாளர் கைது
ADDED : ஆக 07, 2024 01:21 AM
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் உள்ள தாபா ஹோட்டலில், சட்டத்துக்கு விரோதமாக மது அருந்த அனுமதியளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தாபா ஹோட்டலில், ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா திடீர் சோதனை நடத்தினார். அப்போது, தாபாவில் உள்ள குடில்களில் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். மேலும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, தாபா உரிமையாளரான, ப.வேலுாரை சேர்ந்த கந்தசாமி, 52, என்பவரை, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர். 'சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை செய்தால் கைது நடவடிக்கை தொடரும்' என, டி.எஸ்.பி., சங்கீதா எச்சரிக்கை விடுத்தார்.