/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஜூலை 12, 2024 12:59 AM
நாமக்கல், கொல்லிமலையில், தமிழ்நாடு அரசு சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா ஆக., 2, 3 ஆகிய நாட்களில் நடக்கிறது. இதையடுத்து அதிகாரிகளுடனாக ஆலோசனை நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் உமா பேசியதாவது: கடையேழு வள்ளல்களில் ஒருவரான, வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டுதோறும் ஆடி, 17, 18 ஆகிய இரு நாட்கள் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆக., 2,3 ஆகிய இரு நாட்கள் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படும்.
அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். காவல் துறையினர் காரவள்ளியில் சோதனை சாவடிகள் அமைத்து, கொல்லிமலை மலைப்பாதையில் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்வதையும், டூவீலரில் ெஹல்மெட் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. மது அருந்தி வாகனங்கள் இயக்க தடை செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணி, கொல்லிமலை மலைப்பாதை மற்றும் பிற முக்கிய இடங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு போக்கு
வரத்து கழகம் சார்பில் விழா நடைபெறும், இரு நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையினர், விழாவிற்கு வருகை தரும் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
மலைவாழ் மக்கள் கண்டு களிக்கும் வகையில், கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கம் சார்பில் வில்வித்தை விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டி.ஆர்.ஓ., சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு, ஆர்.டி.ஓ., பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.