/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஜூலை 12, 2024 12:59 AM
குமாரபாளையம், குமாரபாளையத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. வருவாய்த்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மின்வாரியம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை, முதல்வரின் விரிவான மருத்துவ மருத்துவ காப்பீடு திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறை சம்பந்தமான புகார் மனுக்களை, அந்தந்த துறை அதிகாரிகளிடம் மக்கள் வழங்கினர். குறிப்பிட சில மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான சான்று வழங்கப்பட்டன.
* திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 26 ஊராட்சிகளில் முதல் கட்டமாக சிறு மொளசி, சித்தாளந்துார், புதுப்புளியம்பட்டி, பிரிதி, எஸ்.இறையமங்கலம், மொளசி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களிடம் முதல்வர் திட்ட முகாம், புதுப்புளியம்பட்டி செல்ல குமாரசாமி கோவில் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தொடங்கி வைத்தார். 14 அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா தங்கவேல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.